manushyaputhiran

Advertisment

கவிஞர்மனுஷ்ய புத்திரன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

இன்று மதியம் காவல்துறை ஆணையரை சந்தித்து எனக்கு எதிராக எச்.ராஜாவின் தூண்டுதலின் பெயரில் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசி வாயிலாகவும் நேற்று மதியத்திலிருந்து தூண்டப்படும் வன்முறை மற்றும் கொலைமிரட்டல்கள் குறித்து புகார் அளித்தேன். சமூக வலைதளங்களில் மற்றும் குறுஞ்செய்திகளில் எனது உடல் நிலை குறித்தும் என்னை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் விதமாகவும் எனக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையிலும் எழுதபட்ட மிரட்டல் பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் நேரடியாக தொலைபேசியில் மிரட்டல் விடுப்பவர்களின் எண்கள் ஆகிய ஆதரங்களுடன் என் புகாரை அளித்தேன். காவல்துறை ஆணையர் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்என்று கூறியுள்ளார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று கேரள வெள்ளம் குறித்து ஒரு கவிதையை பதிவு செய்திருந்தார். அந்தக் கவிதை இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாகக் கூறி பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அந்தக் கவிதையை எதிர்த்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். பாஜகவினர் பலரும் மனுஷ்யபுத்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்தக் கவிதையை மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

hraja tweet