corona

Advertisment

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் இன்று ஒரேநாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாவது நாளாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்த எண்ணிக்கை என்பது இதுவரை இல்லாத அளவு ஆகும். அதேபோல் கரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர்எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது.47,714 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மனுஷ்யபுத்திரன் அவரது முகநூல்பதிவில், "வருத்தமான செய்தி எனக்கு கோவிட்தொற்றுஉறுதி செய்யப்பட்டு, இன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.இதையாருக்கும் சொல்ல வேண்டாம் என்றுதான் விரும்பினேன். அதற்குள் எப்படியோ வாட்ஸ்அப் குரூப்களில் செய்தி பரவ ஆரம்பித்து நண்பர்கள் பலரும் கவலையுடன் அழைக்கதொடங்கி விட்டனர். ஆகவே இதைபொதுவில் பகிர்கிறேன். எவ்வளவோகவனமாக இருந்தும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான்கு நாட்களாக தொடர் காய்ச்சல், சந்தேகப்பட்டு பரிசோதனை செய்து கொண்டதில் பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால்அட்மிட் ஆகி இருக்கிறேன். பத்திரமாக இருங்கள் இந்த முறையும் மீண்டு வந்து விடுவேன் என்றுதான் நம்புகிறேன்'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.