கடலூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் அதற்கான மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரித்த பொழுது ஒரு ஷெட்டில் வெடிபொருட்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக 500 கிலோ வெடிமருந்து மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் என்ற சகோதரர்கள் அனுமதி இன்றி பட்டாசு தயாரித்து வந்தது தெரிய வந்தது. இந்த வெடி மருந்துகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.