Advertisment

தேர்தல் நன்றாக நடக்கிறது ஆனால் நாட்டில்தான் தண்ணி இல்லை... மன்சூர் அலிகான்!

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பு பிறகு நடிகர் மன்சூரலிகான் செய்தியாளர்களை சந்தித்துபேசுகையில்,

Advertisment

தேர்தல்நன்றாக நடக்கிறது. நாட்டில் தண்ணி இல்லை. தபால் ஓட்டுக்கள் கொஞ்சம் முன்னாடியே அனுப்பப்பட்டிருக்க வேண்டும் திடீரென்று அனுப்பப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்கள் வந்து சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆதரவு யாருக்கு என்று சொல்ல மாட்டேன். பொதுவாக பாக்யராஜ் என்பவர் மூத்தவர், நல்ல கலைஞர், சிறந்த திரைக்கதை எழுத்தாளர், சிறந்த நிர்வாகி.

Advertisment

mansur ali khan interview

இன்று மாலையே அனைவருக்குள்ளும் ஒற்றுமை வந்துவிடும். வாக்குப்பதிவு முடிந்த உடனே எங்கேயோ கொண்டு போய் வைத்து விடுவார்களாம் இரண்டு மாதத்திற்கு. மோடி சொல்லிக் கொடுத்துவிட்டார். டிஜிட்டல் இந்தியா இரண்டு மாதம் கழித்து தான் தீர்ப்பு சொல்ல வேண்டும், இந்த எலெக்சனிலாவதுமோசடி நடக்காது என்று நம்புவோம்.

சங்க கட்டிடத்தை ஒரு கட்டடமாக நான் பார்க்கவில்லை. இது ஒரு கோயில், விஷால் மட்டும் தான் கட்டனும் என்றெல்லாம் இல்லை இதில் எல்லா கலைஞர்களின் பங்களிப்பும் இருக்கும் இருக்கவேண்டும். அரசியலில் வேறு வேறுபாடுகள், நிலைபாடுகள்இருக்கலாம் ஆனால்கலைஞர்கள் ஒரு தாய்க்குநான்கு குழந்தைகள் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம். அதேபோல் தான் எங்களது எம்பலமேஇருக்கிறது. அப்படி இருக்கையில் இதை நடிகர் சங்க கட்டடமாகபார்க்கக் கூடாது. கடன் வாங்கக்கூடாது. எல்லா கலைஞர்களிடமும் மடிப் பிச்சை எடுத்து கட்டும்கோயிலாக கருத வேண்டும். என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். இதில்அரசியல் தலையீடு இருப்பது போன்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

எல்லாம் யாகம் வளர்ப்பதை பார்த்தால்சிரிப்பா வருது. எல்லாம் காமெடியன் மாதிரி மாலை போட்டுக்கொண்டு உக்காந்துகிட்டுஇருக்காங்க(அமைச்சர்கள்). அவங்களை பார்த்து வருகிற மழையும்ஓடிப்போய்விடும்.வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என கூறினார்.

mansur ali khan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe