Advertisment

மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்; சேலம் நீதிமன்றம் உத்தவரவு

mansoor

Advertisment

நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சேலம் சென்னை எட்டுவழி சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்களுக்கு ஆதரவாக எட்டு வழி சாலை கொண்டுவந்தால் எட்டு பேரை வெட்டுவேன் என்று ஆக்ரோஷமாக பேசியிருந்தார். எட்டு வழிச்சாலை பற்றிய அறிவிப்பு வந்த சில தினங்களிலேயே அவர் அப்படி பேசியிருந்தார் என்றாலும் எட்டுவழி சாலைக்கான எதிர்ப்பு தற்போது விவசாயிகள் மத்தியில் இன்னும் அதிகரித்து உள்ளது. மன்சூர் அலிகான் இவ்வாறுபேசியது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது.அதை தொடர்ந்துஇன்று சேலம் நீதிமன்றம் அந்தவழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

8 ways road salem to chennai mansoor alikhan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe