Manslaughter near Uthangarai; Loss of Grandson, Grandmother

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் வசித்து வருபவர் தண்டபாணி (45). இவரின் மகன் சுபாஷ் (25.) கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுபாஷ் திருப்பூரில் காதல் திருமணம் செய்து தனது பாட்டி ஊரில் தங்கி உள்ளார். இதனையறிந்து அங்கு வந்த தண்டபாணி இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த சுபாஷ் மற்றும் அவரின்மனைவி அனுஷ்கா, அவரின் பாட்டி கண்ணம்மாள் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

Advertisment

இதில் படுகாயமடைந்த பாட்டி கண்ணம்மாவும் பேரன், சுபாஷும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வெட்டுப்பட்ட அனுஷ்கா அருகே உள்ள முட்புதரில் ஒளிந்துள்ளார். அவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்திலிருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததன் பேரில் போலீசார் மீட்டுஅவரை ஊத்தங்கரை மருத்துவமனையில் வைத்துள்ளனர். அவரின் உடலும் மோசம் அடைந்துள்ளது. காதல் பிரச்சனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் தனது மகன் சுபாஷ் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ளாத தந்தை தண்டபாணி இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காவேரிப்பட்டணம் அருகே நடுரோட்டில் மாமனாரே மருமகளை கொன்ற சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ஊத்தங்கரை பகுதியில் இந்த ஆணவக் கொடூர கொலை நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் ஆணவக் கொலைகள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.