தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கருகியநிலையில்காரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி- பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது தெய்வச்செயல்புரம். இந்த பகுதியில் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம்அருகேஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆளில்லாத பகுதியில் காரில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஒரத்தநாடு போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது, எரிந்தகிடந்த காரில் கருகிய நிலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இது கொலையா அல்லது தற்கொலை சம்பவமா? என்பது குறித்தும், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.