Manorama Sundaranar University eligibility test for Assistant Professor should be postponed

தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு 2024க்கான அறிவிப்பை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்20 மார்ச் 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்தத் தேர்வில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை ஏப்ரல் 1 முதல் 30 தேதி வரைக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து உதவி பேராசிரியர்களுக்கான இந்தத்தகுதித் தேர்வு ஜூன் 07, மற்றும் ஜூன் 08 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத்தகுதித் தேர்வுகள் பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடத்தப்படும். ஆனால் இந்த முறை வெள்ளிக்கிழமையே நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் உதவி பேராசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாராளுமன்ற தேர்வு முடிவுகள் மற்றும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் இந்த நேரத்தில் இந்தத்தேர்வினை வைப்பதை விட மற்றொரு வார விடுமுறை நாளில் இந்தத்தகுதித்தேர்வை வைக்கலாமென தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.