சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நேற்று மதியம் சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. காவல்துறையினர் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பட்டப்பகலில் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் காரை பறிமுதல் செய்து, மனோஜையும் காவல்நிலையம் அழைத்துச்சென்று வழக்கு பதிவு செய்தனர். பின்னர், மனோஜ்க்கு 2500 ரூபாய் அபராதம் விதித்து, இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.