Advertisment

மனோஜ் பாரதிராஜா மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Advertisment

Manoj Bharathiraja passes away; CM MK Stalin condoles

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படம் மூலம் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தை பாரதிராஜாவே இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதனிடைய சமுத்திரம், கடல் பூக்கள், மகா நடிகன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடைசியாக கார்த்தியின் 'விருமன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மனோஜ் பாரதிராஜா கடந்த ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா (வயது 48) மாரடைப்பால் இன்று (25.03.2025) காலமானர். இவரது தமிழ்த்திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

actor
இதையும் படியுங்கள்
Subscribe