Skip to main content

ரூ. 1.24 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணி; நான்கே நாட்களில் சரிந்த சுற்றுச்சுவர்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Mannargudi, the surrounding wall around the pond collapsed within four days

 

மன்னார்குடியில் ரூ. 1.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குளத்தின் சுற்றுச்சுவர் நான்கு நாட்களிலேயே சரிந்து விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கி அரசாணை வெளியிட்டார். மேம்பாட்டு நிதியின் கீழ் திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி நிதியில் நகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் தொலைநோக்கு சிந்தனையோடு நகரம் முழுவதும் உள்ள முக்கியமான  குளங்களைத் தேர்வு செய்து பணிகள் நடந்து வருகிறது.

 

அந்த வகையில் தாமரைக்குளம் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டிலும், ருக்குமணி குளம் ரூ.1.24 கோடி, செங்குளம் ரூ. 82.15 லட்சம், அண்ணாமலை நாதர் கோவில் குளம் ரூ. 75 லட்சம் என 4 குளங்கள் சுமார் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு குளத்தின் கரைகளைச் சுற்றி நவீன முறையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

 

Mannargudi, the surrounding wall around the pond collapsed within four days

 

இந்நிலையில்,  ருக்குமணி குளத்தின் கரைகளைச் சுற்றி  சுற்றுச்சுவர்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் முழுவதும் சரிந்து விழுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே அந்தப் பணிகள் தரமின்றி நடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்த போதிலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு இந்த நிலைக்கு வந்துள்ளது எனக் கூறுகின்றனர். ஒப்பந்ததாரர் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 

இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகையில், “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ருக்குமணி குளம் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கற்கள் பதிக்கும் பணி  நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஒரு பக்கத்தில் கற்கள் சரிந்துள்ளது. தகுதியில்லாத ஒப்பந்ததாரர்களும், முன்னனுபவம் இல்லாதவராக சப் காண்ட்ராக்டரும் இருப்பதே இந்தப் பாதிப்புக்குக் காரணம். அனுபவம் உள்ளவர்களுக்குப் பணியை வழங்க வேண்டும். மக்களின் வரிப் பணத்தை இப்படி விரயம் செய்யக் கூடாது. ஆரம்பம் முதலே இந்தப் பணிகள் தரமாக இல்லை. சில குளங்களுக்குப் போடப்பட்டுள்ள திட்ட மதிப்பீடு(Estimate) அதிகம். அதிகாரிகள் வேலை நடைபெறும் இடங்களில் முறையாக ஆய்வு செய்வதில்லை. இந்தப் பணியில் அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ளவில்லை. ஒப்பந்த விதிகள் மீறப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பதிக்கப்படும் கற்கள் தரமாக இல்லை" எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.