Advertisment

’’நான் எங்கெங்கு சென்றாலும்  பூலான்தேவி தம்பி போல பார்க்கிறார்கள்’’- திவாகரன் 

மன்னார்குடியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அண்ணா திராவிடர் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கட்சியின் பொதுச் செயலாளரான திவாகரன் பத்திரிக்கையாளர்ளை சந்தித்தார் . அப்போது தனக்கே உரிய பானியில் டி.டி.வி.தினகரனையும், அதிமுக அமைச்சர்கள் சிலரைரும் சாடினார்.

Advertisment

அவர் கூறுகையில், "பாராளுமன்ற தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடியால் ஹோட்டல், லாட்ஜ், வீடுகளில் வட இந்தியாவில் எலக்ட்ரானிக் ஓட்டு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் 1 இலட்சம், இரண்டு இலட்சம் வாக்குகள் டேலி ஆகவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையம் எந்த விதமான பதிலும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.

Advertisment

d

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னையை சுற்றி 4500 ஏரி இருக்கிறது. வரவேண்டிய தண்ணீரோடு 25 டிஎம்சி மழை தண்ணீரையும் கொண்டு தண்ணீர் தேவையை நிறைவேற்றி கொள்ளலாம். அதற்கான வல்லுநர்களை அழைத்து அதிமுக அரசால் சரி பண்ண முடியவில்லை.இந்த பணியை எங்களிடம் கொடுத்து பாருங்கள் நாங்கள் செம்மையாக செய்து முடிப்போம்.

அதிமுக தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு காரணம் தினகரன் என்ற மூட்டை பூச்சிதான். அது கடித்து கொண்டு இருந்ததால் , அந்த அழிவு சக்தி எல்லாரையும் அழித்து விட்டது. தினகரன் ஒரு அரசியல் கோமாலி, அவரது சதி வேலையின் காரணமாக தான் சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்தது. ஆட்டு கிடா வெட்டுபவரை நம்புவதை போல தினகரனை நம்பி சாவியை ஒப்படைத்து துன்பத்தை அனுபவித்துவருகிறார் சசிகலா. பத்திரிக்கையாளர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் ஒரு சிரிப்பு சிரிக்கிறார், அப்படி சிரிக்க சொல்லியிருப்பாங்க போலிருக்கு.

சீமான் கட்சி தொடங்கிய உடனே முதல்வராக வேண்டும் பிரதமராக வேண்டும் என நினைக்கிறார். ஆனால் திராவிடர் முன்னேற்ற கழகம் மக்களுக்கான பிரச்சனையை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மொழி பிரச்சனையை முன்னெடுத்து வந்துள்ளார்கள்.

நமக்கு வந்து வாய்த்திருக்கின்ற ராஜாக்கள் எந்த மாதிரியான ராஜாக்கள் என தெரியவில்லை. யாருடைய ராசியோ ஆட்சியை ஆட்டி படைக்கிறது. ராஜாவின் ராசியை பொருத்து தான் மக்கள் வாழ்வும் அமையும். ஜெயலலிதா இறந்த பிறகு நெருக்கடி காலம் தொடங்கியது, ஓபிஎஸ் காட்சியில் கோபப்பட்டு சென்ற போது ஏற்பு விழா சுமுகமாக நடைபெற வழி செய்தேன். ஆனால் ஓ,பி,எஸ் பிஜேபிக்கு ஆதரவாக இருந்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம். இந்த ஆட்சி தொடர வேண்டும்.

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவில் 20 சீட்டுகளை விஐபிக்களே எடுத்துக்கொண்டனர். ஓ,பி,எஸ் மகன், ஜெயகுமார் மகன், ராஜன் செல்லப்பன் மகன் உள்ளிட்டோருக்கு தான் கொடுக்கபட்டது. சீட் கிடைக்காதவர்களுக்கு இப்போது தெரியும் சசிகலா இல்லாமல் இருக்கும் இந்த அருமை. மன்னார்குடியில் உள்ள சோத்திரியத்தில் கிடந்த காமராஜிக்கு சசிகலாவால் தான் சீட்கிடைத்தது.

ஜெயலலிதா இருந்திருந்தால் பாமகவோடோ, பாஜகவோடோ, கரைந்துபோன தேமுதிகவோடோ கூட்டணி வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் வைத்தார்கள். சசிகலா தன் கூட இருந்தவர்களை நம்பியே வீண் போய்விட்டார். நான் எங்கெங்கு சென்றாலும் பூலான்தேவி தம்பி போல பார்க்கிறார்கள்.

அண்ணா திராவிடர் கழகம் வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், அதுலதான் ஒரு லட்சம் பணிக்கு மேல் உள்ளது புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கிறவர்களுக்கு ஒரே களம் உள்ளாட்சி தேர்தல். அதிமுகவிற்கு ஆளும் கட்சி தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது, தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டேன் என்று கூறி விட்டு காவல்துறையைக் கொண்டு பாதுகாப்பு அளிப்பது ஏன் என புரியவில்லை ஏன்றார்.

divakaran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe