Advertisment

பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன் இயற்கை எய்தினார்!

Puducherry

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகன் பாவலர் மன்னர் மன்னன், உடல்நலக்குறைவால் இன்று பிற்பகல் தமது 90 ஆம் வயதில் புதுவையில் இயற்கை எய்தினார்.

Advertisment

பல்வேறு நூல்களை எழுதிய இவர்,வாழ்நாள் முழுக்க வறுமையோடு போராடிய போதும், வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர். நக்கீரன் குழும இலக்கிய ஏடான ‘இனிய உதயத்தில்’ பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை சுவைபட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய் எழுதியவர் மன்னர்மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அவரது மறைவு இலக்கிய உலகித்தினரை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இலக்கியவாதிகளும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Bharathidasan Puducherry son
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe