சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியில்மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, கொடுங்கையூர்எருக்கஞ்சேரியில்பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் கருணாநிதி என்பவர்மீது மாஞ்சா நூல் அறுந்து விழுந்துகழுத்தில் அறுத்துள்ளது. இதனால் படுகாயமடைந்த இளைஞர் கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல்களை உற்பத்தி செய்யக்கூடாது என ஏற்கனவே சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இன்று இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.