மாஞ்சா நூல் விற்பனை... சென்னையில் ஒரே நாளில் 55 பேர் கைது

Manja thread sale ... 55 arrested in one day in Chennai

மாஞ்சா நூல் விற்பனையில்ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அண்மையில் சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் சென்னையில் மூலக்கடை மேம்பாலம் சென்ற இளைஞர் மீது மாஞ்சா நூல் அறுந்துகழுத்தை அறுத்ததை அடுத்து தற்போது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 இடங்களில் மாஞ்சா நூல் அறுந்து விழுந்து இன்று ஒரே நாளில்விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 36 மாஞ்சா நூல் கண்டு. 164 பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாஞ்சா நூல் விற்பனை தொடர்பாக 55 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chennai police
இதையும் படியுங்கள்
Subscribe