மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் குழு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத்தொகுதி உறுப்பினர். டாக்டர். எழிலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், அமைப்பின் மாநில பொதுச்செயலாளர்கள் ஐ.ஆறுமுக நயினார், ஜி.ஆர். ரவீந்திரநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மு. வீரபாண்டியன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கோபி குமார் (சி.ஐ.டி.யு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment