கட்டிட தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆணி ராஜா தலைமையில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘இரண்டு மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டும் காணாமல் இருக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம்’ என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வாயில் கருப்பு துணியை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisment