Advertisment

மணிப்பூர் சம்பவம்; அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக் கண்டித்துப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒருங்கிணைந்தார்கள். அப்போது காவல்துறையினர் அனுமதி இல்லை என்றதால், அவர்கள் பூமா கோவில் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அந்தப் போராட்டத்தில், மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்தும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், மணிப்பூர் சம்பவத்தைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மணிப்பூர் பழங்குடி இன மக்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்கள்.

Annamalai University manipur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe