Skip to main content

மணிப்பூர் சம்பவம்; அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக் கண்டித்துப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒருங்கிணைந்தார்கள். அப்போது காவல்துறையினர் அனுமதி இல்லை என்றதால், அவர்கள் பூமா கோவில் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அந்தப் போராட்டத்தில், மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்தும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், மணிப்பூர் சம்பவத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மணிப்பூர் பழங்குடி இன மக்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமைதியின்மைக்கு எப்போது தீர்வு காணப்படும்?; மணிப்பூர் முதல்வர் பதில்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Manipur Chief Minister's reply on When will the unrest be resolved?

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இதற்கிடையில், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், மணிப்பூரின் ஜிரிபம் என்ற பகுதிக்குச் செல்லவிருந்த நேரத்தில் அவர் பயணித்த கான்வாய் வாகனத்தின் மீது கடந்த 10ஆம் தேதி ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் வீரர் என இருவர் காயமடைந்தனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் குக்கி இன போராளிகள் மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது. அங்கு கலவரம் நடக்கவில்லை என்று பா.ஜ.கவினர் கூறி வந்தாலும் அவ்வப்போது சில இடங்களில் இது போன்று தாக்குதல் சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், இம்பாலில் உள்ள குமான் லாம்பக் இன்டோர் ஹாலில்  சர்வதேச யோகா தின 2024 விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வன்முறை எல்லா இடங்களிலும் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் அது குறைந்துள்ளது. இருப்பினும், சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களில் பள்ளிகள், அரசு நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்படுகின்றன. இது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறியாகும்.

மோடி 3.0 அரசாங்கம் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை மீண்டும் கொண்டு வர முன்னுரிமையாக சேர்த்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து ஏஜென்சிகளுடனும் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை மேற்கொண்டுள்ளார். மணிப்பூர் அமைதியின்மைக்கு தீர்வு காண 2-3 மாதங்களுக்குள் ஒரு செயல் திட்டம் நிச்சயமாக வரும்” என்று கூறினார். 

Next Story

தாக்குதல் சம்பவம்; மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் கடும் கண்டனம்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
 Manipur CM N Biren Singh says for Manipur Jiribam incident

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், மணிப்பூரின் ஜிரிபம் என்ற பகுதிக்குச் செல்லவிருந்த நேரத்தில் அவர் பயணித்த கான்வாய் வாகனத்தின் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் வீரர் என இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் குக்கி இன போராளிகள் மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 53-இல் பிரேன் சிங்கின் கான்வாய் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நான்கு போராளி அமைப்பினர் முதலமைச்சரின் மீது தாக்குதல் நடத்துவதற்காக முயன்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் அருகிலிருந்த பாதுகாப்பு வீரர்கள் இருவர் காயமடைந்திருக்கின்றனர். இதில் பாதுகாப்பு வீரர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக மணிப்பூர் முதல்வர் தாக்குதலில் இருந்து தப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 Manipur CM N Biren Singh says for Manipur Jiribam incident

மணிப்பூரின் ஜிரிபாமில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து இம்பாலில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் கூறுகையில், “இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் கடும் கண்டனத்திற்குரியது. இது முதல்வர் மீதான நேரடி தாக்குதல். அதாவது இந்தத் தாக்குதல் நேரடியாக மாநில மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு இது தொடர்பாக ஏதாவது நடவடிக்கை வேண்டும். எனவே அந்த நடவடிக்கையை நான் எடுப்பேன். எனது சகாக்கள் அனைவரையும் அழைத்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசுகையில், “மணிப்பூர்  மற்றும் நாட்டிற்காக இரவு பகலாக பணியாற்றி வரும் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தச் சம்பவத்தில் காயமடைந்து ஷிஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். ஜிரிபாம் செல்லும் வழியில் ஆயுதமேந்திய குற்றவாளிகள் பதுங்கியிருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார். 

 Manipur CM N Biren Singh says for Manipur Jiribam incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.