manimangalam police google pay amount collect issue

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக மணிபாரதி (வயது 33) என்பவரும், இரண்டாம் நிலை காவலராக அமிர்தராஜ் (வயது 32) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வழக்கம் போல் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில்படப்பை அருகே சாலையோரம் காரை நிறுத்தி திருமணம்நிச்சயிக்கப்பட்டஇளம் ஜோடியினர்பேசிக் கொண்டிருந்துள்ளனர். இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த மணிபாரதியும், அமிர்தராஜும் இவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் விதத்தில்மிரட்டல் விடுத்துள்ளனர்.இதற்கு இளம் ஜோடியினர் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். அதற்கு காவலர்கள் உங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பதிவு செய்தால் என்ன ஆகும் தெரியுமா என்று கூறியதுடன். கூகுள் பே செயலி மூலம் 4 ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள் என்று கூறியுள்ளனர்.

Advertisment

இதனால் பயந்துபோன அந்தஇளம் ஜோடியினர்தாங்களது கூகுள்பே செயலி மூலம் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்துபுகார் ஒன்று மணிமங்கலம் போலீசாருக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் விசாரணைசெய்ததில் காவலர்கள்இருவரும் இளம் ஜோடியினரைமிரட்டி லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனைத்தொடர்ந்து காவலர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.