Skip to main content

மணிகண்டனின் முன் ஜாமீன் கோரிய மனுவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
Manikandan's bail application postponed by High Court

 

திருமண ஆசைகாட்டி மோசடி செய்ததாக நடிகை அளித்த புகாரில் பதிவான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை கருவுறச் செய்து ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுக-வை சேர்ந்த  முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூன் 9ஆம் தேதி வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞா சத்யன், 12 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணியாற்றி, பின் அரசியலுக்குள் நுழைந்தவர் என்றும்,  புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை திருமணமானவர் என தெரிந்து தான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்றும், நடிகையை தெரியும், ஆனால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

 

காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உள்ள தகவல்படி, அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டுள்ளது எப்படி சாத்தியம் என்றும், கரு உருவாகும் முன் எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும் என்றும் மணிகண்டன் கேள்வி எழுப்பப்பட்டது. உதைத்ததாக புகாரிலும் கூறப்படவில்லை என்றும், நடிகையின் கருவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. திருமணமாகாதவன் என்று நடிகையிடம் கூறவில்லை என்றும், அவரை நம்ப வைத்து ஏமாற்றியதாக கூற முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. எந்த மிரட்டலும் விடுக்கவில்லை என்றும், ஏப்ரல் 15 வரை தன்னுடன் வசித்ததாக கூறுவத்ற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

குற்றச்சாட்டுக்கு உள்ளான தன் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும்,  விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும்,  இடைக்கால பாதுகாப்பாக முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மணிகண்டன் கோரிக்கை வைக்கப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், 2017ல் பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு அறிமுகம் ஆன நடிகை, மலேஷியாவின் தென் மாநில தூதராக உள்ளதாகவும், மலேஷியாவில் முதலீடு தொடர்பாக சந்தித்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிகண்டன் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தது, உதைத்ததால் படுகாயம், விசாரானை ஆரம்பநிலையில் உள்ளது, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  எனவே காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், கைது செய்யும் அவசியம் உள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதாகவும் முக்கிய பதவியை வகித்ததால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் வாதிடப்பட்டது. சாந்தினி தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆதரிக்க திருமணம் செய்து கொள்வதாக தோற்றத்தை ஏற்படுத்தியதால் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார் என விளக்கம் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். முதலில் சாந்தினி யார் என தெரியாது என கூறியவர், பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல்  செய்ய உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Holiday notification for Chennai High Court

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுவதால் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளிட்ட வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதோடு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (01.05.2024) முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விடுமுறைக்கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.