Advertisment

போட்ட ஆட்டத்துக்கு முடிச்சீட்டீங்களா அவரை? மணிகண்டனின் முன்னாள், இன்னாள் பி.ஏ.க்கள் வாக்குவாதம்

தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டன் 07.08.2019 புதன்கிழமை நீக்கப்பட்டார். இந்தநிலையில் மணிகண்டனின் முன்னாள், இன்னாள் பி.ஏ.க்கள் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. மணிகண்டனின் முன்னாள் பி.ஏ. காந்தி. அவருக்கு பின்னர் மணிகண்டனுக்கு பி.ஏ.வாக இருந்தவர் செல்வராஜ். மணிகண்டன் பதவி பறிபோனதும், செல்வராஜுக்கு போன் போடுகிறார் காந்தி.

Advertisment

manikandan minister

செல்வராஜ் : ஐயா வணக்கம். சொல்லுங்க.

காந்தி : முடிச்சிட்டீங்கல்ல. சந்தோஷமா?

செல்வராஜ் : என்ன முடிச்சிட்டீங்களா, சந்தோசமா? ஹலோ...

காந்தி : போட்ட ஆட்டத்துக்கு முடிச்சீட்டீங்களா அவரை?

செல்வராஜ் : நாங்க ஆட்டம் போட்டோம் நீங்க ஆட்டம் போடலை?

காந்தி : என்ன ஆட்டம் போட்டோம்?

செல்வராஜ் : நான் என்ன ஆட்டம் போட்டேன் நீ கண்ட?

காந்தி : என்ன ஆட்டம் போடலை?

செல்வராஜ் : நீ என்ன ஆட்டம் போடலை... உன்னை மாதிரி ஊரெல்லாம் ஏமாத்தி ஓளிஞ்சிருக்கேனா?

Advertisment

காந்தி : உன்னை மாதிரி பொம்பள வேலையையா நான் பாத்தேன். உழைச்சோம்மய்யா... அவருக்காக நைட்டும், பகலுமாக உழைச்சோம். உன்னை மாதிரி...''

என இரண்டு பேரும் தொடர்ந்து கெட்ட வார்த்தைகளில் பேசிக்கொள்வதுபோல் முடிகிறது அந்த ஆடியோ.

Assistant admk minister manikandan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe