Advertisment

சென்னை அழைத்து வரப்பட்ட மணிகண்டன்... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!

Manikandan brought to Chennai ... plan to be produced in court!

துணை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

பெங்களூர் பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்பொழுது சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார். தற்போது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து மணிகண்டனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவியாக இருந்த பிரவீன், இளங்கோ ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

மணிகண்டனிடம் முதல் கட்டமாக விசாரணை நடைபெற்ற பிறகு அவர் சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கும்நிலையில், நீதிமன்ற காவலுக்கு செல்வதற்கு முன்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பிறகு மருத்துவச் சான்றிதழுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார் மணிகண்டன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Sexual Abuse police manikandan admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe