Mani Shankar Iyer dont eat at the airport lounge

Advertisment

முன்னாள் மத்திய அமைச்சர்மணிசங்கர்ஐயர் தஞ்சைமாவட்டத்தைச்சேர்ந்தவர், சிறந்த எழுத்தாளர். சர்க்கரைநோய்ப்பாதிப்புடன், 80 வயதாகி விட்டதால் தற்போது மணிசங்கர் ஐயர்அரசியல்நடவடிக்கைகளிலிருந்துவிலகி இருக்கிறார். இவர் தனது உருவினர் புஷ்பவனம் என்பவருடன் நேற்று (23.8.2022) சென்னைசெல்வதற்காகதிருச்சி விமான நிலையம் வந்துள்ளார்.

விமான நிலையஓய்வறையில்காலைடிஃபன்சாப்பிடலாம் எனடிஃபனையும்கையோடு எடுத்துவந்துள்ளார். ஆனால் விமான நிலையஓய்வறையில்அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி வரும் 30ம் தேதி வரைஓய்வறையில்யாருக்கும் அனுமதி இல்லை. அத்துடன் வெளியிலிருந்துகொண்டுவரப்படும் உணவையும் அனுமதிக்க முடியாது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறிவிட்டனர்.

இதுகுறித்து விமான நிலைய மேலாளரிடம்புஷ்பவனம்எடுத்துகூறினார். அதற்கு அவர் வேண்டுமானால் என் அறையில் அமர்ந்து சாப்பிடுங்கள்என்றதாககூறப்படுகிறது. இதை விரும்பாத மணிசங்கர்ஐயர்விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விமான நிலைய வளாகத்திலேயே நின்றபடி காலை டிஃபனைசாப்பிட்டு விட்டு சென்னை புறப்பட்டு சென்றார். இதுகுறித்து விமானபோக்குவரத்துத்துறை அமைச்சரிடம் புகார் செய்வேன் எனமணிசங்கர் ஐயரின் உறவினர் புஷ்பவனம்தெரிவித்துள்ளார்.