/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manirathanam.jpg)
பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3-வது முறையாக அவர் நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ராவணன் படத்தின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார். இதன் பின்னர், 2015ம் ஆண்டில் ஓ காதல் கண்மணி படத்தின் ரிலீசுக்கு பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டபோது டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)