Advertisment

பாலியல் தொல்லை... மான்கராத்தே திரைப்பட நடிகை போலீசில் புகார்!

சின்னத்திரையிலும், சினிமாவிலும் சிறு வேடங்களில் நடித்து வந்தவர் சமிக்சா. மான்கராத்தே படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டு குழந்தைகளுடன் சென்னை கிழக்கு முகபேரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சொந்தமாகவும் செனாய் நகரில் அழகு நிலையம் நடத்திவருகிறார்.

Advertisment

 police

இந்த நிலையில் சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் அவர் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று எனது இரண்டு ஆண் பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் எனக்கு பல வகையிலும் பிரச்சனை ஏற்பட்டது.

பெண்கள் அழகு நிலையம், யோகா பயிற்சி கலையை வைத்து சொந்தமாக கிளினிக் நடத்தி வந்தேன். சின்னத்திரை மற்றும் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடத்து வந்தேன். இப்படிப்பட்ட நேரத்தில் சரவணன் சுப்பிரமணி என்பவர் என்னிடம் அறிமுகமாகி பழகினார். என்னை திருமணம் செய்தாக கூறினார். கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டோம்.

Advertisment

2015ம் ஆண்டு கருவுற்றேன். உடனே சரவணன் எனக்கு அபார்ஷன் செய்துவிட்டார். தொடர்ந்து ஆறு முறை கருவுற்றும் என்னை அடித்து துன்புறுத்தி அபார்ஷன் செய்துவிட்டார். அதன் பிறகு பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். 2016ல்தான் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. இதுபற்றி கேட்கும்போது, முதல் மனைவிக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னார். ஆனால் நாளடைவில் இதுபற்றி விசாரிக்கும்போது அவர் தனது முதல் மனைவியை பிரியவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் எனது பிள்ளைகளோட தனியாக வசிக்க வந்துவிட்டேன்.

தொடர்ந்து எங்கு சென்றாலும் என்னை தொடர்ந்து வந்து என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று அடியாட்கள் மூலமாக தொடர்ந்து என்னையும் எனது மகன்களையும் மிரட்டி வருகிறார். பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதுவரை ஆறு முறை நான் என் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். சரவணன் சுப்பிரமணியும், அவரது முதல் மனைவியும் பல பெண்களை இப்படி ஏமாற்றியுள்ளார் என்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சமிக்சா. இது தொடர்பான விசாரணையை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரித்து வருகிறார்.

Actress complains police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe