Advertisment

மாண்டஸ் புயல் - நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

ரப

Advertisment

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 180 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கித் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலானது இன்று இரவு கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக தற்போது இரவு முதல் அதிகாலை வேளையில் கரையைக் கடக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதைப்போலவே பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe