jlk

Advertisment

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 180 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கித் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலானது இன்று இரவு கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில மணி நேரம்தாமதமாகஇரவு முதல் அதிகாலை வேளையில் கரையைக் கடக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகாபலிபுரத்திற்கு அருகேமாண்டஸ்காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவோ தாழ்வு மண்டலமாகவோ கடக்காமல் புயலாகவே கரையைக் கடக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், விழுப்புரம் ஆகிய ஆறுமாவட்டங்களுக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.