Skip to main content

மண்பாண்டங்கள் தயாரிப்பில் அரசு ஊழியர்..!

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
g

 

      நமது பாரம்பரிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடிய மகிழ்ந்திருக்கும் வேளையில், என்ன தான் நன்குப் படித்து அரசு வேலைக்குப் போனாலும் படிப்புடன், பாரம்பரியத்தையும் காக்க தன்னுடைய கைத்தொழிலான மண்பாண்டங்களைத் தயாரிக்கும் பணியில் அசத்துகிறார் அரசு ஊழியர் ஒருவர்.!

 

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்டங்கள் உலகலவில் பிரசித்திப் பெற்றது. இங்கு அனைத்து விதமான மண்பாண்டங்களும் இங்குள்ள கலைஞர்களால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. மண்பாண்ட தொழிலில் வருமானம் குறைவாக கிடைத்ததால், இளைஞர்கள் படித்து மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். ஆதலால் குறைந்த குடும்பங்களே, இங்கு மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், தான் கற்ற கைத்தொழிலால் மண்பாண்டங்கள் தயாரிப்பில் அசத்தி வருகிறார் அரசு ஊழியர் கோபலகிருஷ்ணன். "  எவ்வளவு தான் படித்து உயர்ந்து, அதிக வருமானம் ஈட்டினாலும் நமது பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலே, விடுமுறை நாட்களில் தவறாமல் இங்கு வந்து என்னுடைய கைத்தொழிலான மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றேன். அது போல் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல இந்த தொழில் என்பதால், யாரெல்லாம் இத்தொழிலைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ அவர்களுக்கு கற்றுக்கொடுக்க தயாராக இருக்கின்றோம். எங்களைப் பொறுத்தவரை மண்மனத்துடன் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்." என்கிறார் அவர்.    

 

g

 

  நமது பாரம்பரிய மண்பாண்டத் தொழிலில் படித்த இளைஞர்கள் ஈடுபட்டால், நவீன உத்திகளை கையாண்டு, இத்தொழிலை மேலும் வளம் பெறச்சொய்வார்கள் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.! இதே வேளையில் நமது பாரம்பரியத் தொழிலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் அரசு ஊழியர் கோபாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது.

 

சார்ந்த செய்திகள்