மதுரை ஆரப்பாளையத்தில் பேருந்து ஓட்டுநரைப் பேருந்து நிலைய அதிகாரி ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நேற்று இரவு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் பயணிகள் அமர்ந்திருந்த நிலையில் மேலாளர்உத்தரவின்றி குறிப்பிட்ட பேருந்தை நேரத்திற்கு முன்பாக செல்ல முடியாது மேலாளரிடம் அனுமதி வாங்க வேண்டுமென பயணிகளிடம் ஓட்டுநர் தெரிவித்த நிலையில் பயணிகளை தூண்டி விடுவதாக மேலாளர் ஓட்டுநரை காலணியால் தாக்கியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் ஓட்டுநரை காலணியால்தாக்கிய அதிகாரி மாரிமுத்துவைதற்காலிக பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.