man who was living separated from his wife passed away suddenly.

ஈரோடு, வீரப்பன் சத்திரம், தீரன் சின்னமலை வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (46). இவருக்கு பெற்றோர்கள் இல்லை. நித்யா என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பிரகாஷ் தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும், தொழில் நஷ்டம் காரணமாகவும் பிரகாஷ் மதுவுக்கு அடிமையானார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரகாஷ் தரையில் விழுந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment