arrested

Advertisment

வேறொரு பெண்ணுடன் கூடா நட்பு இருந்ததை மனைவி தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி வாயில் எலி மருந்தை ஊற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

நாகை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் திருஞானசம்பந்தம் (வயது 32). இவருக்கு வினோதா (30) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருஞானசம்பந்தத்துக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

Advertisment

இந்த விஷயம் வினோதாவுக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக கணவர் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் திருஞானசம்பந்தத்தை கண்டிக்கவில்லை. மேலும் அந்த பெண்ணுடனான தொடர்பை திருஞானசம்பந்தம் நிறுத்தவில்லை.

சம்பவத்தன்று வினோதா, திருஞானசம்பந்தத்திடம் கள்ளக்காதல் குறித்து கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருஞானசம்பந்தம் தனது கள்ளக்காதலியை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனால் செய்வதறியாமல் வினோதா, எனக்கு யாரும் உதவமாட்டீங்களா, அவரை கண்டிக்க மாட்டீங்களா என்று கத்தியுள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்த தகராறின்போது ஆத்திரம் அடைந்த திருஞானசம்பந்தம் வினோதாவின் வாயில் எலி மருந்தை ஊற்றி கொலை செய்ய முயன்றார். அப்போது வினோதா சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் திருஞானசம்பந்தம் வீட்டுக்குள் நுழைந்து வினோதாவை காப்பாற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

நடந்த சம்பவம் குறித்தும், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்தும், மணல்மேடு காவல்நிலையத்தில் வினோதா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலுசார், திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் திருஞானசம்பந்தத்தை மட்டும் போலீசார் கைது செய்தனர்.