Advertisment

மது அருந்த புதுவித திருட்டு; பிடித்து கொடுத்த ஊர் மக்கள்

A man who stole an electric motor wire because he had no money to drink; People of the town who caught him

உளுந்தூர்பேட்டையில்விவசாய கிணற்றிலிருந்து மின் மோட்டார் வயர்கள்திருடப்பட்ட நிலையில், மது வாங்குவதற்கு பணம் இல்லாததால் வயர்களை ஒருவர்திருடியது தெரியவந்துள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆர்.ஆர்.குப்பம் பகுதியில் நேற்று மர்ம நபர் ஒருவர் மின் மோட்டாரில் இருந்து வயர்களை அறுத்து எடுத்துக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அருகே வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். தொடர்ந்து பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்தனர்.

Advertisment

விசாரணையில் அவர் நீலமங்கலம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது. அவரை ஒரு வீட்டு வாசலில் அமர வைத்து சுற்றி நின்ற பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'நீதான வயர திருடன' என கேட்க, 'ஆமா' என அந்த நபர் ஒப்புக்கொண்டார். மது அருந்துவதற்கு காசு இல்லாதபோது இதுபோன்று மின்சாரமோட்டார்களின் வயர்களை திருடி அதை விற்று மது வாங்கி வந்ததாக அந்த நபர் தெரிவித்தார். உடனடியாக போலீசாருக்குதகவல் கொடுக்கப்பட்டது.அவரிடம் இருந்து திருடப்பட்ட மின் வயர்கள், வயரை துண்டிக்க பயன்படுத்திய கருவிகள் போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

kallakurichi police TASMAC VIRAL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe