Man who slandered mother and sister hacked to lose their live; youth arrested

Advertisment

நாகையில் தாய் மற்றும் சகோதரியை அவதூறாகப் பேசிய நண்பனை பட்டாகத்தியால் வெட்டி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ளது எரவாஞ்சேரி கிராமம். இந்தப் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணராஜ், ஆழியூரைச் சேர்ந்த நவீன் ஆகியோர் நண்பர்களாக இருந்த நிலையில் அண்மையில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்த கிருஷ்ணராஜ் சபரி மலைக்குச்சென்றுள்ளார். அந்த நேரத்தில் நவீன் மதுபோதையில் கிருஷ்ணராஜின் வீட்டிற்குச் சென்று அவரது தாய் மற்றும் தங்கையை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிலுக்குச் சென்று திரும்பிய கிருஷ்ணராஜிடம் இதனைத்தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நவீனை பூலாங்குடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பகுதிக்கு கிருஷ்ணராஜ் மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். மது அருந்திய பின் தாய் மற்றும் தங்கை குறித்து அவதூறாகப் பேசியது குறித்து நவீனிடம் கிருஷ்ணராஜ் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலான நிலையில் கிருஷ்ணராஜ் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் நவீனை வெட்டிப் படுகொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் கிருஷ்ணராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.