Advertisment

நண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்தவர் கைது - 2 பேர் தலைமறைவு

man who raped a friend's wife was arrested

நண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

நவிமும்பை பன்வெலை சஞ்செய் - கனகா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் தங்களது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தனர். காண்ட்ராக்ட் வேலை செய்யும் சஞ்செய்யை சந்திக்க அவரது நண்பர்கள் அவ்வப்போது அவரது வீட்டுக்கு வருவார்கள்.

Advertisment

அப்போது அவரது நண்பர்களுக்கு சஞ்செய் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் தெரியும். திடீரென ஒருநாள் கனகா காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்செய் மற்றும் அவரது மகள்கள் அக்கம் பக்கத்தில் பார்த்தனர். எந்த விவரமும் கிடைக்காததால் பன்வெல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் அலங்கோலமாக, மிகவும் சோர்வாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தார் கனகா. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும், என்ன ஆனது எங்கே சென்றாய், நாங்கள் தேடாத இடமில்லை. போலீசிலும் புகார் கொடுத்துள்ளோம் என்றனர்.

அப்போது கனகா அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். சம்பவத்தன்று சஞ்சய் கூப்பிட்டதாக, அவரது நண்பர் பிந்து போயர் என்பவர் கனகாவை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த கார் எங்கும் நிற்காமல் சென்றுள்ளது. ஒரு இடத்தில் நின்றபோது இரண்டு ஆண்கள் ஏறியுள்ளனர். பிறகுதான் தெரிய வந்தது தன்னை அவர்கள் கடத்துகின்றனர் என்பது.

தன்னை ஏன் காரில் அழைத்துச் செல்கிறீர்கள். எனது கணவருக்கு போன் போடும்படி கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இடத்தில் வைத்து கனகாவை, பிந்து போயர் தனது நண்பர்களான உமேஷ், சிவா ஆகியோருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

10 நாட்களாக வெவ்வேறு இடங்களுக்ளில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் ஒரு பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளதாகவும் கனகா கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதை போலீசிடம் சொல்ல வேண்டும் என்று கூறி, தனது மனைவி கனகாவை சஞ்செய் தனது மனைவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார், பிந்து போயர் உள்பட 3 பேர் மீதும் கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பிந்து போயரை கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.

arrested wife Friend Rape
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe