Advertisment

14 வயது சிறுமியுடன் திருமணம்; வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை!

 man who married a 14-year-old girl was jailed for 10 years

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள அரியாம்பட்டி நொச்சிவலவு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (29). இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த14 வயது சிறுமியைக் கடத்திச் சென்றுதிருமணம் செய்து கொண்டார். சிறுமியிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார்.

Advertisment

இதுகுறித்த புகாரின் பேரில் ஜலகண்டாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜாவை குழந்தைத்திருமணத்தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, வாலிபர் ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தார்.

Advertisment

jail POCSO police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe