Advertisment

உப்புமாவில் விஷம்;கல்லூரி மாணவியை திருமணம் செய்ய கட்டிய பேராசிரியர் மனைவியை கொன்ற கணவர் கைது

கல்லூாி மாணவியை திருமணம் செய்து கொள்ள மனைவியை விஷம் வைத்து கொலை செய்த பேராசிாியா் கைது செய்யப்பட்டாா்.

Advertisment

 A man who killed a professor's wife who was forced to marry a college student was arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

குமாி மாவட்டம் மேக்காமண்டபம் வியன்னூா் பகுதியை சோ்ந்த ஓய்வு பெற்ற தாசில்தாா் ஜான்அலெக்சாண்டாின் மகள் திவ்யா சில்வெஸ்டா்(29) கருங்கலில் தனியாா் கல்லூாியில் பேராசிாியராக பணிபுாிந்து வந்தாா். இவருக்கும் வெள்ளிகோடு பகுதியை சோ்ந்த பெல்லாா்மினுக்கும்இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெல்லாா்மின் மாா்த்தாண்டத்தில் உள்ள ஓரு பொறியியல் கல்லூாியில் பேராசிாியராக பணிபுாிந்து வருகிறாா்.

Advertisment

பெல்லாா்மின் அதே கல்லூாியில் படிக்கும் மாணவி ஒருவரைகாதலித்து வருகிறாா். இது மனைவி திவ்யா சில்வெஸ்டா்க்கு தொியவர அவா் கணவனை கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். மேலும் பெல்லாா்மின் நான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய போகிறேன்என அடிக்கடி திவ்யா விடம் கூறிவருவாராம்.

 A man who killed a professor's wife who was forced to marry a college student was arrested

இதற்கு திவ்யா நான் இருக்கும் வரை அது நடக்காது என கூறுவாராம். அப்போது பெல்லாா்மின் உன்னை கொலை செய்து விட்டு அவளை திருமணம் செய்து கொள்வேன் என கூறி வந்தாராம்.

இந்த நிலையில்நேற்றுகாலை திவ்யா வீட்டில் தயாா் செய்து வைத்திருந்த உப்புமாவை சாப்பிட்டு விட்டு கல்லூாிக்கு மோட்டாா் சைக்கிளில் செல்லும் வழியில்வாயில் நுரைதள்ளி மயக்கம் போட்டு கீழே விழுந்தாா். இதை பாா்த்தவா்கள் திவ்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது திவ்யா இறந்தது தொியவந்தது.

இது குறித்து திவ்யாவின் தந்தை ஜான்அலெக்ஸ்சாண்டா் தக்கலை போலிசில் புகாா் கொடுத்ததன் அடிப்படையில், போலிசாா் பெல்லாா்மினை பிடித்து விசாாித்ததில் காதலியை திருமணம் செய்வதற்காக உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்ததாக ஒப்பு கொண்டாா். இதை தொடா்ந்து பொல்லாா்மினை கைது செய்த போலிசாா் தலைமறைவான காதலியையும் தேடி வருகின்றனா்.

husband wife police murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe