Man who climbed a high-voltage tower and made threats rescued

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி மிரட்டல் விட்ட நபரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி அருகில் உயர்மின் அழுத்த கோபுரம் ஒன்று உள்ளது. மின்னழுத்த கோபுரத்தில் ஏறிய நபர் ஒருவர் மேலிருந்து குதித்து விடுவதாக மிரட்டல் விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் கருப்பசாமி என்ற அந்த நபரை கயிறு மூலம் மீட்டு கீழே இறக்கி வந்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.