இந்தியாவில் வேலையில்லாத திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளி விவரத்தில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.1% அதிகரிப்பு என்கிற நிலையில் அரசாங்க வேலை கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தவறுதலாக கிடைத்த அரசு பணி நியமன ஆணையை வைத்து ஏமாற்றிய வேலைக்கு சேர்ந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் குலமாணிக்கம் செம்பியான்குடி வடக்கு காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ராஜிவ்காந்தி. இவர் டிஎன்பிஎஸ்சி நடத்திய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணபித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

court

Advertisment

தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஆணையை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைத்தனர். வேலைக்கான ஆணையை போஸ்மாஸ்டர் சரியாக விசாரிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் வடக்கு தெருவில்வசிக்கு சப்பாணி மகன் ராஜீவ்காந்தியிடம் கொடுத்துள்ளார்.

அவரும் நான் அவரில்லை என்று தெரிவிக்காமல் வேலைக்கான ஆணையை பெற்றுள்ளார். இந்த ஆணையை வைத்து ஆள் மாறாட்டம் செய்து வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்று ராஜீவ்காந்தி முடிவு செய்து அனைத்து ஆவணங்களையும் கொண்டு கோர்ட் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

ராஜீவ்காந்தியின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த அதிகாரிகள் ராஜீவ்காந்தியை லால்குடி உரிமையில் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியமர்த்தினார்.

Advertisment

இதனையடுத்து லால்குடி நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணி சேர்ந்த ராஜீவ்காந்தி கடந்த 45 நாட்கள் பணிபுரிந்திருக்கிறார். 15 நாட்கள் வேலை செய்தற்கான சம்பளத்தை வாங்கியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிபெற்றும் அதற்கான ஆணை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் உண்மையான ராஜீவ்காந்தி. உடனே அவர்கள் தரப்பில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை அனுப்பி விட்டோம். நீங்களும்வேலைக்கு சேர்ந்து சம்பளமும் வாங்கியிருப்பதாகநீதிபதி சொல்லியிருக்கிறார்.

நீதிபதி சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்திக்கு மயக்கமே வந்துள்ளது. எனக்கு எந்த ஆணையும் வரவில்லை. நான் எங்கையும் வேலைக்கு சேரவில்லை என்று தன் தரப்பு நியாயத்தை சொல்லியிருக்கிறார். ராஜீவ்காந்தியின் பேச்சை கேட்ட நீதிபதி எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து விசாரணை நடத்த சொல்லி உத்தரவிட்டுயிருக்கிறார்.

விசாரணையில் சப்பாணியின் மகன் ராஜீவ்காந்தி ஆள்மாறாட்டம் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றிபணியில் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு லால்குடி நீதிமன்றத்தின் தலைமை எழுத்தர் மெஸ்லினா மெரினா மோனிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலிசார் சப்பாணி மகன் ராஜீவ்காந்தியின் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.