ஆசை 60 நாள்...! காதல் வலையில் வீழ்த்தி 'கணவன்' போர்வையில் சிறுமியை சீரழித்த வாலிபர் கைது!

man who cheated and married girl arrested pocso act

பாலக்கோடு அருகேபள்ளிச் சிறுமியை காதல் திருமணம் செய்து நாசம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்த மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்ததை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தனியாக ஒருவீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில், பெற்றோரை பார்க்க ஆசையாக இருப்பதாகக் கூறிய காதல் மனைவியை, விரைவில் சொந்த ஊருக்குஅழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார் அவருடைய கணவர். அதன்படி, பிப். 1ம் தேதிதர்மபுரி பேருந்து நிலையத்தில் மனைவியுடன் வந்த வாலிபர்அவரைத்தனியாக விட்டுவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார்.

நீண்ட நேரமாகியும் கணவர் வராததால் அவருடைய அலைபேசியை தொடர்பு கொண்டுள்ளார். அந்த வாலிபர் எடுத்துப் பேசவில்லைஎனத் தெரிகிறது. தொடர்ச்சியாக அவருடைய எண்ணுக்கு முயன்றபோது ஒரு கட்டத்தில் அவர் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டார். இதையடுத்துதான் அந்தச் சிறுமி, தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தார். கையறு நிலையில் தடுமாறிய மாணவி, வேறு வழியின்றி தனது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் மகளை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

பெற்றோர் விசாரித்ததில், மகள் தற்போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர்நடத்திய விசாரணையில், பொரத்தூரைச் சேர்ந்த முத்து மகன் கவியரசன்(20) என்பவர்சிறுமியைதிருமணம் செய்துபாலியல் பலாத்காரம்செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துகைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரைதர்மபுரி சிறையில் அடைத்தனர்.

arrested dharmapuri POCSO
இதையும் படியுங்கள்
Subscribe