Advertisment

ஜல்லிக்கட்டு காளை சிலையுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்; மாடுபிடி வீரரின் நெகிழ்ச்சி செயல்

 man who celebrated his birthday by garlanding the jallikattu bull statue

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும்மாடு பிடி வீரர் தனது பிறந்த நாளை, ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு மாலை அணிவித்து, குடும்பத்தோடு சிலை அருகே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

Advertisment

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் புதுக்கோட்டை புறநகர் கோயில்பட்டி கிராமத்தில் திருமணம் செய்து செய்துகொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஏராளமான வாடிவாசல்களில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியுள்ளார். நேற்று(10.12.2023) தனது பிறந்த நாளை கொண்டாட நினைத்தவர் கேக், மாலை, பட்டு துண்டு வாங்கிக் கொண்டு தனது குடும்பத்தினர் நண்பர்களுடன் புதுக்கோட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு வந்து, காளை சிலைக்கு பட்டு துண்டு, ரோஜா பூ மாலை அணிவித்த பிறகு, நண்பர்கள் குடும்பத்தினர் ஹேப்பி பர்த்டே சொல்ல, சிலையின் கீழே வைத்து பிறந்த நாள் கேக் வெட்டி, தனது பிறந்த கொண்டாடினார். இந்த நிகழ்வைப் பார்த்து அந்த வழியாகச் சென்றவர்களும் இறங்கி வந்து, மாடுபிடி வீரர் தினேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைகூறிச் சென்றனர்.

Advertisment

காளைகள் மீது எனக்கு பாசம் உண்டு. பல வாடிவாசல்களில் காளைகளை கட்டி இருக்கிறேன். இன்று எனது பிறந்த நாளை காளை சிலை அருகேகொண்டாட நினைத்தேன். ஜல்லிக்கட்டு காளை சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு, காளையின் காலடியில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

pudukkottai jallikattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe