man who came to petition minister ponmudi enforcement department has also been detained at home

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதிஎம்.பியுமானகௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Advertisment

அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறதா என்பதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் காலையில் சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு மனு கொடுப்பதற்காக ஒருவர் வந்துள்ளார். பொதுவாக அமைச்சரின் வீட்டிற்குக் காலையில் மனு கொடுக்க மக்கள்வருவதுவழக்கம். அந்த வகையில் தான் இன்று மன்னார்குடியைசேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அமைச்சர்பொன்முடியைச்சந்தித்து மனு கொடுக்க வந்துள்ளார். அந்த நேரம் பார்த்துஅமலாக்கத்துறைஅதிகாரிகள் அமைச்சர்வீட்டிற்குச் சோதனைக்கு வந்த போது கதவை மூடி யாரும் இங்கிருந்து வெளியே போகக்கூடாதுஎன்று கூறியுள்ளனர். அதனால் மனுகொடுக்க வந்த ராஜேந்திரன்அமைச்சர் வீட்டிலேயே மாட்டிக்கொண்டார். காலையிலிருந்து அவருக்குக் குடிப்பதற்குத்தண்ணீர் கூட தரவில்லை என்று கூறப்படுகிறது.