Skip to main content

ஜோலார்பேட்டையில் பயங்கரம்; ஜாமினில் வெளியே வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 27/05/2025 | Edited on 27/05/2025

 

man who came out on bail near Jolarpettai was lost as revenge

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த திம்மராயன் (48) ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்தார். இவருக்கும், அவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் நில தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‌ கடந்த பிப்ரவரி 17 தேதி அன்று ‌ஜோலார்பேட்டை அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள  வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதையடுத்து 9 நாட்களுக்கு பின்னர் போலீசார் சக்கரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த சக்கரவர்த்தியை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்து போட சக்கரவர்த்தியும் அவரது மனைவி கௌரியும் புறப்பட்டு சென்றனர். இடையேபொன்னேரி பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தபோது அங்கு இவர்களை நோட்டமிட்ட ஸ்கார்பியோ வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரவர்த்தியை சாராமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு விழுந்துள்ளது.

தகவலின் பேரில் சம்வ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிகிச்சை சக்கரவர்த்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்த மாமனை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்து ஜாமீனில் வெளியே வந்த மச்சானை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்