ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று இரவு ரமேஷ் எனும் நபரை கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
முன்விரோதம் காரணமாக பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கொலையானவர் பெயர் ரமேஷ் என்றும் கொலை செய்தவர்கள் குணா என்கிற குணசேகரன் கோஷ்டியினர் என்றும் சொல்லப்படுகிறது.
ஈரோட்டில் சமீபகாலமாக ரவுடிகள் மோதல் இல்லாதநிலை இருந்துவந்த நிலையில் தற்போது நடந்துள்ள இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.