திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அந்த வகையில் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கலைரானி என்பவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் கலைரானிக்கு மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். குளுக்கோஸ் பாட்டில் மாட்டிவிடும் ஸ்டேண்ட் இல்லாததால், கலைராணியின் உறவினர் ஒருவரின் கையில் குளுக்கோஸ் பாட்டிலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ள நிலையில் வேகமாக பரவி வருகிறது.