/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/04_95.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான சைனகுண்டா சோதனை சாவடியில் குடியாத்தம் கிராமிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மேலும் இவர் குடியாத்தம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வேல்குமார் என்பதும் (வயது 23) இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து குடியாத்தம் பகுதியில் விற்பனை செய்வதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்துஇரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)