திருச்சியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். இவர் ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்தில் தொடர்புடையவர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி கோட்டை பகுதியைச்சேர்ந்த வாலிபர் ஒருவர் திருச்சி கோட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் (பிரைட் கார் வாட்டர்) சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இவர் மீது திருச்சி தொட்டியம் காவல் நிலையத்தில், குட்கா கடத்தி வந்த வாகனத்தை ஆயுதத்தை காட்டி மிரட்டி கடத்தியதாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அந்த வாலிபரை கோயம்புத்தூர் போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.