Advertisment

'Man Vs Wild' நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை- ரஜினிகாந்த் பேட்டி!

உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபராக பதவிவகித்தபோது ஒபாமா கலந்துகொண்டிருந்தார். அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்.

Advertisment

man vs wild shooting actor rajinikanth incident

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து இதற்கான ஷூட்டிங்கில் அவர் பங்கேற்றிருக்கிறார். ஷூட்டிங்கின் போது ரஜினிக்கு சிறுகாயம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

chennai

Advertisment

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த், 'Man Vs Wild' நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் சிறு முள் குத்திவிட்டது என்று கூறினார்.

Actor Rajinikanth bear grylls incident man vs wild
இதையும் படியுங்கள்
Subscribe