
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கோட்டை அம்மன் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஹனிபா(31). இவர் அவரது மனைவியை பார்க்க இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் புறவழிச் சாலை வழியாக லால்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தபோது, சிதம்பரம் தாலுகா காவல் நிலையம் எதிரே மர்ம நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது வாகனத்தை நிறுத்தி ஏற்றிய சில நொடிகளில் அந்த மர்ம நபர் கொடை கீழே விழுந்து விட்டது வாகனத்தை நிறுத்துங்கள் என தெரிவித்ததால் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அடுத்த கனமே அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது ஹனிபாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது கனிபா உயிர் தப்பினால் போதுமென அந்த மர்ம நபரை தள்ளி விட்டுவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த காவலர்கள் கழுத்தை அறுத்த அந்த மர்ம நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் குள்ளஞ்சாவடி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விசாரணை செய்ததில் அவர் கஞ்சா போதையில் இருப்பதால் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தொடர்ந்து அளித்ததால் கொலை முயற்சி ,வழிபறி உள்ளிட்ட பிரிவின் கீழ் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
காவல் நிலையம் எதிரே இளைஞரின் கழுத்தை அறுத்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கழுத்து அறுபட்டு பலத்த காயத்துடன் முகமது கஹணிபா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.