Man passes away by electric shock

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பண்டார சாலைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால்(48). மரம் அறுக்கும் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை காலை இவர், அவரது வீட்டுக்குப்பின் பகுதியில் உள்ள மரத்தை மரம் அறுக்கும்மின்சார கருவி மூலம் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரம் அறுக்கும் கருவியில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி ராஜகோபால் மயங்கி விழுந்தார்.

Advertisment

இதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத்தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Advertisment